×

டி-20 கிரிக்கெட்: காலிறுதி போட்டி துவக்கம்

 மொடக்குறிச்சி, ஜன.4:  ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும்  மாவட்ட அளவிலான  டி-20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிச.21ம் தேதி முதல் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
இப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று உள்ளது. போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்து வருகிறது. ஜன.3ம் தேதி காலை தொடங்கும்  கால் இறுதி போட்டியில் சம்மர், பிரண்ட்ஸ், ராயல்ஸ், ஸ்கைபாய்ஸ், நந்தா கல்லூரி,  ஸ்டார் கிரிக்கெட் அகாடமி, சாம்பியன்ஸ், மெசஸ்டிக் கப்ஸ் மற்றும் ரெயின்போ ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன. இதைத்தொடர்ந்து ஜன.5ம் தேதி அரை இறுதி போட்டியும், ஜன.6ல் இறுதிப்போட்டியும் நடக்கிறது.

Tags : D ,quarterfinals ,
× RELATED தோகைமலை- திருச்சி மெயின் ரோடு...