×

புதுக்குளம் கண்மாயை தூர்வார வேண்டும் கண்டமனூர் மக்கள் கோரிக்கை

வருசநாடு, ஜன.4: கண்டமனூர் புதுக்குளம் கண்மாயைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே கண்டமனூர் கிராமத்தில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. பலஆண்டுகளாக இக்கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தற்போது 30 ஏக்கர் மட்டுமே உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் கண்மாயின் பரப்பளவு சுருங்கி வருகிறது.புதுக்குளம் கண்மாய் தூர் வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என கண்டமனூர் கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பல கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கண்மாய் கரைகளை பலப்படுத்தி அமைத்தால் மட்டும் மழை நீரை தேக்க முடியும். பல ஆண்டு காலமாக எங்கள் புதுக்குளம் கண்மாயை தூர்வார கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தூர்வாரும் பணி நடப்பதே இல்லை. இதனால் தேனி மாவட்ட கலெக்டர், இக்கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறினர்.
தெரிஞ்சுக்கலாம் வாங்க...மூக்கில் அடைப்பு ஏற்படும் போது வாயினால் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு வாயினுள் புகுந்து வெளியேறும் காற்று உள்வாயின் மேல் பகுதியில் அமைந்துள்ள மெல்லிய சவ்வை முன்னும் பின்னும் அசைக்கிறது. இதன் அசைவே குறட்டையாக வெளிப்படுகிறது.

Tags : Kandanur ,
× RELATED புளியமரத்தை அகற்ற மக்கள் வலியுறுத்தல்