×

கட்டபொம்மன் சிலைக்கு மாலை

மதுரை, ஜன. 4: வீரபாண்டிய கட்டபொம்மனின் 260வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  திமுக மாநகர் பொறுப்புக்குழு தலைவர் தளபதி தலைமையில் மிசா பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டபொம்மன் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டிடிவி தினகரன் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்தனர்.  மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்தனர்.  தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் சுருதிரமேஷ் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் அவைத்தலைவர் சங்கரவேலு தலைமையில் கண்ணதாசன் நற்பணி மன்றம் நிறுவனர் சொக்கலிங்கம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணியினர், நாயுடு சமூகத்தினரின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Kattabomman ,
× RELATED நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு