×

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் வழிபாடு

பழநி, ஜன. 4: பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் உள்ள பொம்மக்கா கோயிலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சிலை அமைக்கப்பட்டது. இவரது 260வது பிறந்தநாளான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கட்டபொம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகபூஜைகள் நடந்தன. பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

Tags : Veerapandiya Kattabomman ,
× RELATED வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு...