×

முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி ஊராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்ேத பயிற்சி துவக்கம்

முத்துப்பேட்டை, ஜன.4:    முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கராத்தே சிறப்பு தற்காப்பு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வாசுகி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா பேசுகையில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து அரசு ஏற்படுத்தி தந்துள்ள இத்திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு வாரந்தோரும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 24 பயிற்சி வகுப்புகள் இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வழங்கபட உள்ளது என்றார். பள்ளியின் கராத்தே பயிற்சியின் ஒருங்கிணப்பாளரும் ஆங்கில பட்டதாரி ஆசிரியையுமான அகிலாண்டேஸ்வரி பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து பேசுகையில், தற்காப்பு கலையின் அவசியம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். கராத்தே சிறப்பு பயிற்சியாளர் ரென்ஞ்.மகேந்திரன் மாணவிகளுக்கு  கரேத்தே பயிற்சியின் நோக்கம், உடல் வலிமையை மேம்படுத்துதல் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில் மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Tags : panchayat school students ,Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...