×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணை செலுத்த காலஅவகாசம்

புதுக்கோட்டை,ஜன.4:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணை தொகை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இது  குறித்து கலெக்டர் கணேஷ் கூறியதாவது: கஜா புயலால் பாதிப்படைந்த  விவசாயிகளின் கடன்களுக்கு பயிர் சேதத்தின் அடிப்படையில் ஒருவருட காலம் அசல்  மற்றும் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருடம் முதல் 4 வருடம் வரை  கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சலுகையானது வருவாய்த்துறையின்  அன்னவாரி சான்றிதழ் பயிர் சேதத்திற்கேற்ப வழங்கப்படும். மேலும், பயிர்  சேதம் 33 சதவீதம் முதல் சதவீம் வரையிலும் மற்றும் 50 சதவீதத்திற்கு  மேலும் இருக்க வேண்டும்.  இதர மத்திய கால விவசாய கடன், தொழில் மற்றும்  வர்த்தகம் சார்ந்த கடன், சுய உதவிக்குழு கடன், வீட்டுக்கடன் மற்றும்  கால்நடை வளர்ப்பு கடன் ஆகியவற்றிற்கு ஒருவருட காலம் அசல் மற்றும் வட்டியை  செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 வாடிக்கையாளர்கள்  தங்களது பகுதிகளில் உள்ள பொதுத்துறை நிறுவன வங்கி, தனியார் வங்கி உள்ளிட்ட வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பத்தை  சமர்ப்பித்து இச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை  சமர்ப்பிக்க மார்ச் 9 கடைசி தேதி. புயல் பாதிப்பிற்கு பிறகு வரக்கூடிய கடன்  தவணைகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Client ,storm ,Bank of Qazi ,
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...