×

ஆலங்குடி அருகே அதிகாலை தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பல் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி உயிர் தப்பினர்

ஆலங்குடி, ஜன.4: ஆலங்குடி அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பல் ஆனது. இந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  அருகேயுள்ள கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவரது மனைவி காளியம்மாள்(46). குடிசை வீட்டில் வசித்து  வந்துள்ளனர். நேற்று அதிகாலை திடீரென குடிசை வீடு தீப்பற்றி  எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வீட்டில் உறங்கி  கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி காளியம்மாளை வெளியேற்றும்  முயற்சியில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து,  இருவரும் அலறி அடித்துக்கொண்டு  வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்த ரேஷன்  கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இடத்திற்குண்டான பத்திரங்கள்,  நெல் முட்டைகள், ரொக்கம் 22 ஆயிரம் உட்பட அனைத்தும் எரிந்து  நாசமானது.  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் கொடுத்தனர். இதன்  பேரில் தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள்  குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து ஆலங்குடி  போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக குடிசை வீடு  எரிந்ததா அல்லது வேறு காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி  வருகின்றனர்.கோயில்  மேற்கூரை தீயில் நாசம் : புதுக்கோட்டை  நிஜாம் காலனி பாமா நகர் பாப்பன் குளக்கரையில் உலகை ஆளும் முத்துமாரியம்மன்  கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று  வருகிறது. இதனால் கோயிலில் இருந்த முத்துமாரியம்மன் சிலை எடுக்கப்பட்டு, கூரை அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் புயல் தாக்கியதில் கோயிலின் மேற்கூரை சேதமடைந்து இருந்தது. நேற்று  முன்தினம் நள்ளிரவு கோயிலில் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. இதில் கோயிலின் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் முத்துமாரியம்மன்  சிலையில் தீயில் கருகியது.

Tags : morning fire ,cottage ,Alangudi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்