×

உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு தமிழக சிறைகளில் 65 கைதிகள் சாவு அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.4: தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் 65 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். தமிழகத்தில் சென்ைன புழல், திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, மதுரை என மொத்தம் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதுதவிர பெண்களுக்காக 5 தனிச்சிறைகள், கிளை சிறைச்சாலைகளும் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உடல் நலக்குறைவு மற்றும் ஆஸ்துமா, மூச்சு திணறல், சர்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனைகளில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தமிழகம் முழுவதும் ஆஸ்துமா, உடல் நலக்குறைவால 65 கைதிகள் இறந்துள்ளனர். இதேபோல் வேலூர் மத்திய சிறையில் 16க்கும் மேற்பட்ட ைகதிகள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். சிறைகளில் உயிரிழந்த கைதிகள் ஆஸ்துமா, முச்சுத்திணறல், வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் தற்போது குளிர்காலம் என்பதால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்டப்டு வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி பிரபு(30). இவர் கடந்த 1ம் தேதி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : jails ,inmates ,death toll officials ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்