×

திருவள்ளூர் நகராட்சியில் ₹1.04 கோடி வரி நிலுவை: ஜன.31க்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி

திருவள்ளூர், ஜன. 4: திருவள்ளூர் நகராட்சியில் ₹1.04 கோடி வரி நிலுவையில் உள்ள நிலையில் ஜனவரி 31க்குள் செலுத்தாவிடில், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் முருகேசன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் நகராட்சியில் 9,510 வீடுகள், 2,879 கடைகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளில் தொடர்ந்து தொய்வுநிலை ஏற்பட்டு வருகிறது. குடிநீர், புதை வடிகால், சாலை போன்ற அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய இயலாத  நிலைக்கு நிதி இல்லாமையும் ஒரு காரணமாக அமைகிறது.

இதற்கு மக்களின் பங்கும் அதிகமாக உள்ளதால், தாங்களாக முன்வந்து தங்களது வரிபாக்கியை செலுத்த வேண்டும். நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம் என மொத்தம் ₹1  கோடியே 4 லட்சத்து 21 ஆயிரம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மக்களின் பங்கீடு அவசியம் என்பதால் வரிபாக்கி உள்ளோர் ஜனவரி 31க்குள் வரியினங்களை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல்  வைத்தல், ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur ,municipality ,Jatti ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த...