×

சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு தர்ம அடி

கும்மிடிப்பூண்டி, ஜன. 4: கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர் (33) என்பவர் கடந்த டிசம்பர் 31ம் அன்று பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம்  கூறி அழுதுள்ளார்.
தகவலறிந்ததும் அப்பகுதி மக்கள் சங்கரை பிடித்து தர்மஅடி கொடுத்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சங்கரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Tags : Younger: Dharma ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...