×

பெரிய தாதா யார்? என்ற போட்டியில் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டி கொலை

சென்னை, ஜன. 4: சென்னை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (36). பிரபல ரவுடி. இவர் மீது அண்ணாநகர், அரும்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  அண்ணாநகர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அன்னை சத்யா நகரில் யார் பெரிய தாதா? என்பதில் அதேப் பகுதி ராபர்ட் (26) என்பவருக்கும், இவருக்கும் இடையே போட்டி இருந்ததாக  தெரிகிறது. இதனால் ராபர்ட்டை சந்தானம் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் சிறைக்கு சென்ற சந்தானம் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ அன்னை சத்யாநகரிலிருந்து தனது குடும்பத்தை அரும்பாக்கம் எம்எம்டிஏ  காலனி விநாயகபுரத்தில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடியேற்றினார். ரவுடி சந்தானத்தை கொலை செய்ய ராபர்ட் குழுவினர் பலமுறை முயற்சி ெசய்தும் தோல்வியில் முடிந்தது. சந்தானம் அரும்பாக்கத்தில் வசித்து வந்தாலும் அவரது தாய் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சந்தானம் தனது தாயை பார்க்க அன்னை சத்யா நகருக்கு பைக்கில் வந்துள்ளார். தகவலறிந்து, ராபர்ட் தரப்பினர் அன்னை சத்யா நகர் 8வது தெருவில் மறைந்து இருந்தனர். சந்தானம் வந்தபோது, அவரது  முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். கண்ணில் விழுந்து எரிச்சலில் நிலைதடுமாறிய சந்தானம் கீழே விழுந்தார்.

உடனே, ராபர்ட் தரப்பை சேர்ந்த 7 பேர் சரமாரியாக அரிவாளால் சந்தானத்தை வெட்டினர். அவர்களிடம் இருந்து உயிர்தப்ப சந்தானம் அலறி அடித்து கொண்டு ஓடினார். ஆனாலும், அவரை ஓட ஓட விரட்டி, வெட்டி சாய்த்துவிட்டு  தப்பினர்.தகவலறிந்து அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்தானத்ைத மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் செல்லும் வழியில்  சந்தானம் உயிரிழந்தார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ெசய்து சந்தானத்தை கொலை ெசய்த அன்னை சத்யா நகரை சேர்ந்த ராபர்ட் (21) மற்றும் அவரது தம்பி ஜோசப் (19), சதீஷ் (25), ஹரி (18), அண்ணாநகர் கே.பிளாக்கை சேர்ந்த விமல் (20)  மற்றும் இரண்டு சிறுவர்கள் என 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 7 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : daddy ,match ,
× RELATED 2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்