×

அஞ்செட்டி அருகே ராகி, அவரை, துவரை பயிர்களை அழித்து யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கண்ணீர்

தேன்கனிக்கோட்டை, ஜன.3:  அஞ்செட்டி அருகே கோட்டையூர் கிராமத்தில் ராகி, அவரை, துவரை பயிர்களை அழித்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பா (40) விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி பயிர்களை அறுவடை செய்து களத்தில் போர்போட்டு குவித்து வைத்திருந்தார். கோட்டையூர், பிலிக்கல் காட்டுப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டம், நேற்று முன்தினம் இரவு கோட்டையூருக்குள் புகுந்து மாரப்பா அறுவடை செய்து வைத்திருந்த ராகி கட்டுகளை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் துவரை, அவரை செடிகளையும் நாசப்படுத்தின. நேற்று காலை ராகி போர்கள் நாசமடைந்துள்ளதை பார்த்து மாரப்பாவும், அக்கம், பக்கத்தில் உள்ள விவசாயிகளும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உரிகம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ராகி போர்களை பார்வையிட்டனர். பல ஆயிரம் ரூபாய் நஷ்டமானதால் கண்ணீர் விட்ட மாரப்பாவுக்கு ஆறுதல் கூறினர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

Tags : Ragi ,Anjeti ,
× RELATED ராகி சப்பாத்தி