பைக் விபத்தில் வாலிபர் பலி

பந்தலூர், ஜன.3 : கொளப்பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வீரமணி(35), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 31ம் தேதி தனது நண்பர் தவநாதன்(42) என்பவருடன் பைக்கில் பேக்டரி மட்டம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் இருவரும் தவறி விழுந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரை மீட்டு கேரளவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை வீரமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்கு பதிந்து வசிாரிக்கின்றனர்.

Related Stories:

>