×

கூலிப்படையினர் என்று நினைத்து ஒரத்தநாட்டில் 3 வாலிபர்களை கட்டி வைத்து தாக்கிய மக்கள்

ஒரத்தநாடு, ஜன. 3: ஒரத்தநாடு அருகே கூலிப்படையினர் என்று நினைத்து 3 வாலிபர்களை கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கினர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துவதற்காக நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மாங்குடி வேளாளர் தெருவை சேர்ந்த சரவணன் (25), முதலிப்பட்டியை சேர்ந்த கருப்பையா (31), மாங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முத்துகருப்பன் (25) ஆகியோர் வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற நண்பரை சந்தித்தனர். இதைதொடர்ந்து சரவணன், கருப்பையா, முத்துகருப்பன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் மது அருந்தினர்.

அப்போது, ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் 4 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சிலர், டாஸ்மாக் கடைக்கு வந்து சரவணன், கருப்பையா, முத்துகருப்பன் ஆகியோரை கூலிப்படையை சேர்ந்தவர்களாக என்ற கேட்டு தகராறு செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் சரவணன், கருப்பையா, முத்துகருப்பன் ஆகியோரை ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சிலர் அடித்து இழுத்து சென்று கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீசார் நேற்று காலை ஒக்கநாடு கீழையூருக்கு சென்றனர். அப்போது மரத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்களிடமிருந்து சரவணன், கருப்பையா, முத்துகருப்பன் ஆகியோரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : mercenaries ,homeland ,
× RELATED பொன்னேரியில் கள்ளக்காதலன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது