×

திருத்தங்கல்லில் 12 இடங்களில் ‘ஹைமாஸ் லைட்’

சிவகாசி. ஜன. 3: திருத்தங்கல்லில் உள்ள மங்கம்மா சாலை, அண்ணா காலனி, பெரியார் காலனி, அம்மா உணவகம், அக்ரஹாரத் தெரு, சக்திமாரியம்மன் கோயில், இந்திரா நகர் மெயின் ரோடு, சத்யா நகர், கண்ணகி காலனி, எம்ஜிஆர் நகரில் இரண்டு தெரு உள்ளிட்ட 12 இடங்களில் விருதுநகர் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் தலா ரூ.3.50 லட்சத்தில், மொத்தம் ரூ.42 லட்சத்தில் ஹைமாஸ் லைட்கள் அமைக்கப்பட்டன.
இவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ராதாகிருஷ்ணன் எம்பி தலைமை வகித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து ஹைமாஸ் லைட்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் சுவாமிநாதன், பொறியாளர் சாகுல்ஹமீது, அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ராமராஜ், இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் தனுஷ், திருத்தங்கல் ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர்கள் அ.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும்,  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.


Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...