×

வழக்கு முடித்து வைப்பு நரிக்குடி-காரியாபட்டி மார்க்கத்தில் சரக்கு வேன்களில் பயணிக்கும் பொதுமக்கள்

திருச்சுழி, ஜன். 3 நரிக்குடியிலிருந்து இலுப்பைகுளம் வழியாக காரியாபட்டிக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் உவர்புளியங்குளம், சாலை இலுப்பைக்குளம், இருவர்குளம், பனைக்குடி, எஸ்.மறைக்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் வேலைக்கும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கும் காரியாபட்டிக்கு சென்று வருகின்றனர்.நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு காலை நேரத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பஸ் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் மதியம் 12.30, 2.30, மாலை 4.15 மணி என ஒரு தனியார் பஸ் காரியாபட்டி செல்லுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பும் பஸ்ஸை தவறவிட்டால், அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் வேறு வழியின்றி லோடு வேன்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சுரேஷ் என்பவர் கூறுகையில், ‘நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் வழியில் கிராமங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் அரசு பஸ்களில்தான் செல்கின்றனர். காலை நேரங்களில் அரசு பஸ் குறைவாக இருப்பதால், பஸ்களில் இடமின்றி படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். பஸ்களை தவறவிட்டால், திருச்சுழி வழியாக அருப்புக்கோட்டை சென்று காரியாபட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண தூரமும், பண விரையமும் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வேன்களில் பயணிக்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நரிக்குடியில் இருது காரியாபட்டிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.


Tags : Civilians ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...