×

பெண் சிசுக்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்

ஆண்டிபட்டி, ஜன. 3: ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் சிசுக்கொலை தினத்தை முன்னிட்டு பெண் சிசுக்கொலை விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும்போதோ பிறந்த குழந்தையை பெண் குழந்தையாக தெரிந்து கொள்வதை (ஒழிப்பதை) பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என்றும் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை என்றும் கூறப்படுகிறது.இந்தியாவில் பெண் சிசுக்களில் இறப்பு சதவிகிதம் ஆண் சிசுவின் இறப்பு விதத்தை விட 75 சதவிகிதம் அதிகமுள்ளது. சமமாக இருக்க வேண்டிய பிறப்பு இறப்பு விகிதம் பெண் சிசுவில் அதிகரித்து வருகிறது. பெண் கருக்கொலையில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தெருக்கூத்து நாடகம் மற்றும்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்