×

பாளையம்-கம்பம் நெடுஞ்சாலையில் பேரிகாட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் தவிப்பு

உத்தமபாளையம், ஜன. 3:உத்தமபாளையம்-கம்பம் மாநில நெடுஞ்சாலைகளில் பேரிகாட்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாத நிலையில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
உத்தமபாளையம், கம்பம் மாநில நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் தினமும் செல்கின்றன. உத்தமபாளையம் செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாபயணிகள் கேரளாவிற்கு செல்கின்றனர். இதனால் இச்சாலை எப்போதும் வாகன நெருக்கடியால் திணறுகிறது.“இவை தவிர தற்போது ஐயப்ன் கோயில் சீசன் என்பதால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதேபோல் போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் தேவாரம்-போடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் லட்சுமிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், சில்லமரத்துபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிாரமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. வாகன நெரிசலால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன.

மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாக இருப்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. டூவீலர்கள், கார்கள், தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. உத்தமபாளையம்-கம்பம் செல்லும் சாலையிலும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வளைவுகளில் விபத்து எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகளோ, ஆபத்தான இடங்கள் என்று குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்ற போர்டுகளோ இல்லை. ஆனால் போலீசாரின் முயற்சியால் அதிகமான பேரிகாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிகாட்களிலும் இருந்த ஒளிரும் ஸ்டிக்கர்கள் உதிர்ந்துள்ளன. இரவில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அசுர வேகத்தில் வருவதால் இவர்களுக்கு பேரிகாட்கள் இருப்பதே தெரிவதில்லை. பெயரளவில் பேரிகாட் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, இதில் சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டாமல் இருப்பது ஆபத்தாகவே முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே பேரிகாட்களில் சிவப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : highway ,Palayam-Pallam ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...