மக்கள் பீதி பரமக்குடியில் பட்டப்பகலில் திருட்டு, வழிப்பறி அதிகரிப்பு போலீஸ் ரோந்து தீவிரமாகுமா?

பரமக்குடி, ஜன.3: பரமக்குடியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பகல் நேரங்களில்கூட திருட்டு, வழிப்பறி  சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் தைரியமாக வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. தற்போது போலீசார் இரவு ரோந்து வருகிறார்களா என்பது தெரியவில்லை. போலீசாரின் கண்காணிப்பு பணி குறைவால் திருட்டு கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது, கேஸ் ஏஜென்சி, மின்சார வாரியம், நகராட்சி அலுவலகங்களிலிருந்து வருவதாக செல்லி வீட்டிற்குள் சென்று மயக்க மருந்து கொடுத்து எளிதாக திருடி வருகின்றனர். எனவே திருடர்களை கட்டுப்படுத்த பரமரக்குடியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மக்கள் கூறுகையில், பரமக்குடியில் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலேயே திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள் வீதியில் நடமாட அச்சப்படுகின்றனர். போலீஸ் ரோந்து இல்லாததே இதற்கு காரணம். இதனை கட்டுப்படுத்த ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். போலீசார் சிறப்பாக செயல்பட எஸ்.பி.,யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>