×

கண்களுக்கு விருந்து இடையூறாக இருந்து வரும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மதுரை, ஜன.3: மதுரையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் மாநகராட்சிக்கு ேகள்வி எழுப்பியுள்ளனர்.மதுரை மாநகராட்சி 4 மண்டலங்களை 100 வார்டுகளாக பிரித்துள்ளனர். இங்கு சுமார் 14 லட்சம் மக்கள் தொகை உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து மாநகர் உருவாகியதாக வரலாறு தெரிவிக்கிறது. இதனால் ரோடுகள் பெரும்பாலும் குறுகலாக அமைந்துள்ளது. மாசி வீதிகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், ஆரப்பாளையம், கீரைத்துறை, முனிச்சாலையைச் சுற்றிய பகுதிகள், தபால் தந்திநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளாக பரந்துவிரிந்துள்ளது.
குறிப்பாக பழைய 72 வார்டுகளில் உள்ள முக்கிய தெருக்களில் நடைபாதைகள் (பிளாட்பாரம்) அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகள் பல இடங்களில் எடக்குமடக்காக உள்ளது. குறுகலான ரோட்டில் இருபுறமும் நடைபாதை அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை முடியும் இடத்தில் மின்கம்பங்கள் ஊன்றி வைத்துள்ளதால் இதற்கு இடைப்பட்ட பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

உதாரணமாக 50 அடியாக இருக்கும் ரோடு நடைபாதை, மின்கம்பங்களால் சுருங்கி 30 அடியாக மாறி விட்டது. தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ராமச்சந்திர தடாகத் தெருவில் நடைபாதை அகலமாக உள்ளது. இதனால் ரோடு சுருங்கி, இதில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மதுரையில் பழைய வார்டுகளுக்குள் மட்டுமே ஆக்கிரமிப்புடன் கூடிய கடைகள் சுமார் 4 ஆயிரம் இருக்கும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் மின்கம்பங்களும் மதுரை நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் ேமற்பட்டு இருக்கின்றன. இவற்றை வரையறுத்து ஊன்றி வைக்காமல் விட்டதால் பல இடங்களில் இடையூறாக இருந்து வருகின்றன. நடைபாதைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரோடுகளை அகலமாக்கி சீரமைக்கப்படுமா? என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை