×

பேரையூர் பகுதியில் மழையில்லாமல் மகசூலை இழந்த விவசாயிகள்

பேரையூர், ஜன.3: பேரையூர் தாலுகா, மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதி, வாழைத் தோப்பு பகுதியில் மலை நெல்லிக்காய் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதுமான மழை பெய்யாததால் அனைத்து விதமான பயிர்களின் விளைச்சலும், மகசூலும் குறைந்து விட்டது. இந்நிலையில் இப்பகுதியில் தற்போது நெல்லிக்காய் அறுவடை மகசூல் நடைபெற்று வருகிறது. போதிய மழையில்லாமல் குறைந்த அளவே மகசூல் இருந்தாலும், அறுவடை செய்யப்பட்ட நெல்லிக்காய் கேரளா கோழிக்கோடு பகுதிக்கு விற்பனைக்கு செல்கிறது.பறிக்கப்பட்ட நெல்லிக்காய்கள் தரம் பிரிக்கப்பட்டு தரமான நெல்லிக்காய்கள் கிலோ ரூ.15க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இருந்தாலும், மழையில்லாமல் மகசூல் குறைந்து விடுவதுன் வேதனையாக இருக்கிறது. விலையிருக்கும் போது மகசூல் குறைந்து விடுகிறது, மகசூல் கூடும்போது விலை குறைந்து விடுகிறது என்றனர் விவசாயிகள்.பழனியைச் சேர்ந்த நெல்லிக்காய் வியாபாரி பாலகிருஷ்ணன் கூறும்போது, பறிக்கப்பட்ட நெல்லிக்காய்களை தரம் பிரித்துதான் இங்கிருந்து கொண்டு செல்வோம். ஆனாலும் எங்களிடம் வாங்கும் வியாபாரிகள் நாங்கள் தரம் பிரித்ததிலேயே அவர்கள் மேலும் தரம் பிரித்து கழிவு நெல்லிக்காய்களை கழித்து எடுப்பார்கள். அதனால் கேரளா கொண்டு செல்வதற்கு எங்களுக்கு டிரான்ஸ்போர்ட் செலவே ஒரு கிலோவுக்கு ரூ.7 வந்து விடும், அதிலிருந்துதான் நாங்கள் லாபம் பார்க்க வேண்டும் என்றார்.
வியாபாரி முத்துலட்சுமி கூறும்போது, நாங்கள் வாங்கிச் செல்லும் நெல்லிக்காய்களை தரம்பிரித்து முதல் தரத்தை கிலோ ரூ15க்கும், கழிவு செய்யப்பட்ட நெல்லிக்காய்கள் கிலோ ரூ.5 மற்றும் ரூ.6க்கு வாங்கி செல்கிறோம். இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானது தான் விலைதான் என்றார்.விவசாயி தங்கத்துரை கூறும்போது, இப்பகுதியில் மலையடிவாரமாகவே இருந்தாலும், மழை இல்லாமல் போனதால் குறைந்த மகசூல்தான் இந்தாண்டு உள்ளது. இருந்தாலும் நஷ்டமில்லாத விலை என்பது தற்போது சரியாக இருக்கும். அடுத்த அறுவடைக்குத்தான் இதுபோன்று மழையில்லாமல் இருந்தால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றார்.

Tags : rain fall ,area ,Periyur ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...