×

பிடிமானம் இல்லாத தடுப்புகள் பீதிக்குள்ளாகும் வாகனஓட்டிகள் ‘இனி பயன்படாது’ 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சியில் ஒப்படைப்பு

திண்டுக்கல், ஜன. 3: தடை உத்தரவினை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியில் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூன் அன்று பிளாஸ்டிக் தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி கடந்த 6 மாதமாக மாவட்டத்தில் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.1) முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க மாநகராட்சி அறிவுறுத்தியது. இதன்படி பொதுமக்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சுமார் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியில் ஒப்படைத்தனர். மேலும் சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க சங்க நிர்வாகிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று கலெக்டர் வினய் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டார். இதன்படி பூ மார்க்கெட், பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டார். அப்போது பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். முதல்முறை என்பதால் தற்போது பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இவற்றை பயன்படுத்தினால் அபராதமும் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எளிதில் ஒப்படைக்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் அனிதா, சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்