×

புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

புதுக்கோட்டை, ஜன.3: புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் துணிப்பைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் நேற்று நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கடைகளை சோதனை செய்தனர். பல்வேறு இடங்களில் துணிப்பைகளை பயன்படுத்தினர். சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளதை கண்டு பிடித்தனர். தடை செய்யப்பட்ட கேரிப்பை,  உள்ளிட்ட சுமார் 1.50 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

அறந்தாங்கி: அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், நகராட்சி ஆணையர் மீராஅலி தலைமையில், நகராட்சி சுகாதாரப்பிரிவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.27 வார்டுகளிலும் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Health officials ,area ,Aranthangi ,Puthukottai ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...