×

குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 வழங்க கோரி நாகையில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

நாகை, ஜன.3: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்  குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 வழங்க கோரி  நாகை அவுரித்திடலில் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடந்தது.   தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் போனஸ் ரூ.500 சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்பூதியர்களுக்கும் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 வழங்க வேண்டும், மாதம் 5ம் தேதிக்குள் ஓய்வூதியம்ய வழங்க வேண்டும்,  ஒட்டுமொத்த தெகை, சிறப்பு சேம நல நிதி ஓய்வு பெறும் நாளில் வழங்க வேம்.
ஈமக்கிரியை முன் பணம் ரூ. 50 ஆயிரம் எனவும்,  ஒட்டுமொத்த தொகை ரூ. 5 லட்சம் என வழங்க வேண்டும்,  பஸ் பாஸ் மற்றும் மாவட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும், சிறப்பு ஓய்வூதியம் பெறும்  வருவாய் கிராம உதவியாளர் 50 சதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், படிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி  நாகை அவுரித்திடலில் நேற்று காலை  சங்க மாவட்ட தலைவர் சந்திரா தலைமையில் தமிழக அரசின் கவனம் ஈர்த்திடும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டத்தை விளக்கி  மாநில துணைத் தலைவர் மதிவாணன் பேசினார்.  இதில்  அங்கன்வாடி ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் புவனேஸ்வரி,  மாவடட பொருளாளர் மரியஜெயராஜ் மற்றும்  நிர்வாகிகள் தமிழ்செல்வன், லெட்சுமி, பரமேஸ்வரி, தமிழ்செல்வி,  அரங்கநாதன், ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Minimum Benson ,
× RELATED குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 வழங்க கோரி...