×

காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செஞ்சி, ஜன. 3: மேல்மலையனூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் பொருட்டு கடந்த 28ம் தேதி முதல் ஜனவரி 11ம் தேதி வரையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பம் செய்யலாம் என மேல்மலையனூர் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, இவ்வட்டத்தில் காலியாக உள்ள ஆர்க்காம்பூண்டி(பிற்படுத்தப்பட்டோர்) பெண்கள், ஆதரவற்ற விதவை, அவலூர்பேட்டை (பொது), கெங்கபுரம் (பிற்படுத்தப்பட்டோர்(பொது), கம்மந்தாங்கல்(பொது), மேல்செவலாம்பாடி(ஆதிதிராவிடர்) பெண்கள், (ஆதரவற்ற விதவை), நாராயணமங்கலம்(மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), பாப்பந்தாங்கல்(பிற்படுத்தப்பட்டோர், (பொது) பரையந்தாங்கல்(பிற்படுத்தப்பட்டோர்), முஸ்லீம்முன்னுரிமை, (பொது) ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

 எனவே 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, சைக்கிள் ஓட்டத்தெரிந்த, எழுத, படிக்க தெரிந்த நபர்கள் பணியிடம் காலியாக உள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, குடும்ப அட்டை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும் முன்னுரிமை கோருபவர்கள் மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம், முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான அதார ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.  எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பு பிரிவில் உள்ளவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.'

Tags : village assistant workplace ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை