×

விசிக பிரமுகர் இல்லம் திறப்பு

பள்ளிப்பட்டு, ஜன.3: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் எம்.கே.நேரு-நளினி இல்ல திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். திருத்தணி தொகுதி துணை செயலாளர் க.குமார் வரவேற்புரையாற்றினார்.
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியா, ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சாம், பா.வாசு, ஆ.மணி, நிர்வாகிகள் அசோகன், சாமுவேல், தினேஷ்குமார், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நேரு-நளினா இல்லத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திறந்து வைத்து பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜனவரி 21ம் தேதி தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். அதன் பிறகு நேரு குடும்பத்தின் சார்பில் மாநாட்டு நிதியாக இருபதாயிரத்திற்கான காசோலையை திருமாவளவனிடம் வழங்கினார். முன்னதாக ஆர்.கே.பேட்டைக்கு வந்த திருமாவளவனுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நீலவானத்துநிலவன், அ.பாலசிங்கம், நற்குமரன், பி.டி.செல்வம், தளபதிசுந்தர்,  சிவக்குமார், நரசிம்மன், பிரகாஷ், கிருஷ்ணன், ஜெயபால், வேலு, மணி, அகிலன், ஜான், சுப்பிரமணி, நாகராஜ், பப்லு சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Visi Drama Home Opening ,
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...