×

பிஏபி பாசனசபை தேர்தல் விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, டிச. 28: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. பாசன முறையை நிர்வகிக்க ஏராளமான பாசன சபைகளை உள்ளடக்கிய கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் செயல்படுகிறது. 134 பகிர்மான கால்வாய் பாசன சபை நிர்வாகிகள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் திட்டக்குழு உறுப்பினர்கள் 9 பேரை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் ஐந்தரை ஆண்டு காலம் பதவியில் இருப்பார்கள்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால், பணிகள் முடங்கி உள்ளது.இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், பகிர்மான கால்வாய்களில் தூர் வாரப்படாமல் உள்ளது. இதுபற்றி அரசு கண்டுகொள்ளாத நிலையில், விவசாயிகளே பணம் வசூல் செய்து அவ்வப்போது தூர்வாருவது வழக்கம்.
மேலும் தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் அடங்கிய குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் சங்கத்துக்கு முறையான நிர்வாகிகள் இல்லாததால் இந்த பணிகள் முடங்கி உள்ளது. எனவே, விரைவில் பாசன சபை தேர்தல் நடத்த வேண்டும் என்றனர்.

Tags : BAP ,
× RELATED பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத...