×

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபரை கஸ்டடி எடுத்து தீவிர விசாரணை திடுக் தகவல்கள் அம்பலம்

திருச்சி, டிச. 28: திருச்சி ரங்கம் கொள்ளிடக்கரையில் குளிக்கச்சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபரை ஒரு நாள் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.திருச்சி ரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் மகா (15), நஜிமா (15) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ளனர். இருவரும் கடந்த 8ம் தேதி மாலை பஞ்சக்கரை சாலை கொள்ளிடக்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த  நான்கு பேர் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு சிறுமிகளும் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றபோது மகா மட்டும்  சிக்கிக் கொண்டார். அவரை இரண்டு வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர். தப்பியோடிய நஜிமா அப்பகுதி பொதுமக்களிடம் நடந்ததைகூறி அழைத்து வந்தார். இதைப்பார்த்து நால்வரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து பலத்த காயங்களுடன் இருந்த மகாவை அப்பகுதியினர் மீட்டு, ரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், மகளிர் இன்ஸ்பெக்டர் மும்தாஜ் ஆகியோர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டிரைனேஜ் ரோட்டை சேர்ந்த ரவுடி மகேஸ்வரன் (28), பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னை பலாத்காரம் செய்ததாக மகா தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விஜய், சூர்யா ஆகியோரை கடந்த 9ம் தேதி கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த டிரைனேஜ் தெரு, இந்திரா நகரை சேர்ந்த பாலு (எ) பாலகிருஷ்ணன் (23), கடந்த 9ம் தேதி திருச்சி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகேஷ்வரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி சரணடைந்தார்.

இதற்கிடையில் ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்ததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில் சிறையில் இருந்த மகேஸ்வரனை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு ரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 1 நாள் காவல் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 24ம் தேதி மகேஸ்வரனை கஸ்டடி எடுத்த உதவி கமிஷனர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி, போக்சோ, வன்கொடுமை சட்டம், பலாத்காரம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்து மீண்டும் சிறையில் அடைத்தார்.விசாரணையின் போது, மகேஸ்வரன் தெரிவித்ததாக போலீசார் கூறுகையில், கடந்த டிசம்பர் 8ம் தேதி, குளிக்க சென்ற 2 சிறுமிகளை அழைத்து சில்மிஷம் செய்த மகேஸ்வரன், பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது அருகில் இருந்த மற்றொரு சிறுமி தப்பியோடினார். தொடர்ந்து மகாவை பலவந்தப்படுத்தி மகேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை தொடர்ந்து பாலு, சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி மயக்கமடைந்தார். இதனைப்பார்த்த விஜய், சூர்யா இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் தப்பியோடிய சிறுமி, உறவினர்களை அழைத்து வந்ததால் 4 பேரும் தப்பியோடினர். மயக்க நிலையில் இருந்த சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறினர். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் நிவாரண தொகைக்கு உதவி கமிஷனர் ராமச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.மிரட்டி பலமுறை பலாத்காரம்
கொள்ளிடம் பஞ்சக்கரையில் உள்ள முட்புதரில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது. முட்புதருக்குள் தரையை சுத்தம் செய்து அதில் கொசுவலையை படுக்கையாக போட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். முட்புதராக இருப்பதால், அவ்வழியே செல்பவர்களுக்கு தெரியாது. இதனை பயன்படுத்திய மகேஸ்வரன் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. டாஸ்மாக் காவலாளியிடம்கத்தியை காட்டி பணம் பறிப்பு கடந்த 8ம் தேதி மாலை தப்பியோடிய மகேஸ்வரன், பாலு ஆகியோர் 9ம் தேதி அதிகாலை திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் காவலாளியான சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தை சேர்ந்தவர் சேது (54) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : investigators ,
× RELATED பெண் குழந்தைகள் பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு