×

அன்னவாசல், கந்தர்வகோட்டை பகுதிகளில் நிவாரணம் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

அன்னவாசல், டிச.28: புயல் நிவாரணம் கேட்டு அன்னவாசல், கந்தர்வகோட்டை பகுதிகளில் 5 இடங்களில் நேற்று சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் ஊராட்சி பகுதியில்  கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2 நாட்களாக  வருவாய்த்துறையினர் தமிழக அரசால் வழங்கப்படும் 27 பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க டோக்கன் வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கணக்கெடுப்பில் குளறுபடிகள் உள்ளதாவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என கோரி பரம்பூர் ஊராட்சி மக்கள் புதுக்கோட்டை-மணப்பாறை சாலை பரம்பூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுதது மறியல் கைவிடப்பட்டது.  இதே போல கந்தர்வகோட்டை அருகே  காட்டுநாவல் கிராமத்தில்  நிவாரணம், நிவாரண பொருட்கள், வீடு இழப்புக்கு  நிவாரணம் போன்றவை வழங்க கோரி  மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே  கோரிக்கையை வலியுறுத்தி  குளத்துநாயக்கர்பட்டி, நடுப்பட்டி,  சேவியர்குடிகாடு ஆகிய கிராமங்களிலும்  மக்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road traffic accidents ,places ,areas ,Annavasal ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30...