×

ஆத்தூரில் பானை விற்பனை ஜோர்

ஆத்தூர், டிச.28: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆத்தூர் பகுதியில் மண் சட்டிகள், பொங்கல் பானைகளின் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இதுகுறித்து மண் சட்டி விற்னையில் ஈடுபட்டுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த சாந்தி கூறியதாவது: பெரம்பலூர் பகுதிகளில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களான சட்டி, பானைகளுக்கு ஆத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நகரப்பகுதியில் வாழ்பவர்கள் மண்பாண்ட சமையல்களை அதிகளவில் விரும்புகிறார்கள். இதனால், மண்பாண்ட பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. மண்பாண்ட பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு தனி ருசி கிடைப்பதால் பொதுமக்கள் தற்போது மண்பாண்ட சமையலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

நீண்டநேரம் சூடு குறையாமலும் நல்ல மணத்துடனும் உணவு பொருட்கள் இருப்பதால், பெண்கள் அதிகமாக மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், மண்பாண்ட பொருட்களை தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் பெரும் சிக்கலாக உள்ளது. இதனால், மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களை போன்ற தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pott ,Athur ,Jore ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்