×

பாரதி வித்யாலயா பள்ளியில்

சேலம், டிச.28: சேலம் மரவனேரி பாரதி வித்யாலயா பள்ளியில், மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
சேலம் பாரதி வித்யாலயா சங்கம், சேலம் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மரவனேரியில் நடந்த விழாவிற்கு, இரு சங்கங்களின் தலைவர் சீனி.துரைசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்ச்சங்க செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில், முனைவர் ரவிக்குமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், பாரதியார் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நிர்வாகிகள் அசோக் துரைசாமி, சுரேஷ், சிவக்குமார், மாணிக்கம் , கவுசல்யா கிருஷ்ணன், கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bharathi Vidyalaya ,school ,
× RELATED மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா