×

கஞ்சா விற்றவர் கைது

பழநி, டிச. 28: பழநி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பழநி அருகே பாப்பம்பட்டியில் தாலுகா போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள தெற்கு தெரு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (63) என்பவரை பிடித்து விசாரித்ததில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போலீசார் மூக்கையாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்னே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Cannara ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!