×

தேனி, பெரியகுளத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

தேனி, டிச.25: பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வரும் தேனி, பெரியகுளம் நகரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் பாமக கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அக்கட்சியின்தேனி வடக்கு மாவட்ட செயலாளர் சேட் தலைமையில் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்தனர். மனுவில்,  தேனி நகர் 29 வது வார்டில் தனியார் ஆரம்பப்பள்ளி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதேபோல, பெரியகுளம் நகர் தென்கரையில் திருவள்ளுவர் சிலை பின்புறம் ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்படுகிறது. அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, நகராட்சி, தபால் நிலையம் உள்ளிட்டவை உள்ளன. எனவே தேனி நகர் 29 வது வார்டில் உள்ள டாஸ்மாக் கடையையும், பெரியகுளம் நகர் திருவள்ளுவர் சிலை பின்புறம் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையையும் அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Theni ,removal ,shop ,Tasmag ,room ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...