×

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

ராமநாதபுரம், டிச.25: ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் அனுமதி இன்றியும், சுகாதார மற்ற முறையிலும் ஆட்டுகறி, மீன், காய்கறிகளை விற்பனை செய்து வந்த கடைகளை அகற்றி, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த பொருட்களை அழித்தனர். சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் ஆலோசனைப்படி, கலெக்டர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டுகறி, மீன்கள், காய்கறிகடைகளை அகற்றி சுகாதார மற்ற முறையில் விற்பனை செய்த சுமார் 20 கிலோ மதிப்புள்ள ஆட்டு இறைச்சிகளை அழித்தனர்.

அப்பகுதி ஓட்டல்களில் ஆய்வு நடத்தி 20 கிலோ எடையுள்ள பழைய சிக்கன் கறி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள டீக்கடைகளில் உள்ள பலகாரவகைகளை மூடிவைத்து சுகாதார முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுபாஸ்சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கர்ணன், தர்மர், சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Food security officers ,area ,Ramanathpur Bharathi Nagar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...