×

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலையில் சுற்றுலா வேன்-சரக்கு வேன் மோதி விபத்து கேரள சுற்றுலா பயணிகள் படுகாயம்

ராமேஸ்வரம், டிச.25: ராமேஸ்வரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த வாகன விபத்தில் பலத்த காயமடைந்த கேரளா சுற்றுலா பயணிகள் இருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் நேற்று ஒரு வேனில் ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் மதியத்திற்குமேல் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாறையடி கடற்கரை துறைமுக அருகில் வேன் சென்றபோது, எதிரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த டாட ஏஸ் வேன் ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வேன் மீது விபத்து ஏற்பட்டது.

இதில் சுற்றுலா வேனில் இருந்த விஜிஸ்(40), ரைஸ்னா(20) ஆகியோருக்கு தலை மற்றும் கால்களில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் 5 பேருக்கும், டாடாஏஸ் வேனில் இருந்த ராஜேஸ்வரி, கவுசல்யா, சத்யேஸ்வரி உட்பட 6 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.  பலத்த காயம் அடைந்த கேரளாவை சேர்ந்த விஜிஸ், ரைஸ்னா இருவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்த தனுஷ்கோடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Travelers ,road ,Vanessa ,Dhanushkodi ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...