×

திருமயம் அருகே கே.செட்டிப்பட்டியில் 10 ஆண்டுகளாக பழுதடைந்த சாலை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விரக்தி சீரமைக்க கலெக்டரிடம் மக்கள் மனு

புதுக்கோட்டை, டிச.25:  திருமயம் அருகே  சாலையை சீரமைக்க  கோரி மனு கொடுத்தும் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால். விரக்தியடைந்த கிராம ம க்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.    புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. . இதில் திருமயம் அருகே உள்ள கே.செட்டிபட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கானப்பூர், கே.செட்டிபட்டி, ஆனைவாரி கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு   உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது பற்றி கே.செட்டிபட்டி கிராம மக்களிடம் கேட்ட போது:புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் இருந்து கானப்பூர் வழியாக காரைக்குடி செல்லும் சுமார் 6கிமீ. சாலை 10 ஆண்டுகளுக்கு முன்னர் செப்பனிடப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை சரிவர பராமரிக்காததால் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது.

இதனிடையே 10 ஆண்டுகளாக பழுதடைந்த சாலையை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இரண்டு மாதத்திற்கு முன்னர் சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி சாலை எங்கள் கிராம மக்கள் சாலை மறியில் செய்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து பல நாட்கள் கடந்த நிலையில் இது வரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் சாலை மறியல் செய்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என கருதி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தனர். மேலும் கடந்த மாதம் வீசிய கஜா புயலில் கே.செட்டிபட்டி பஞ்சாயத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் புயல் பாதிப்பில்லா ஒரு சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது மன வேதனையளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கே.செட்டிபட்டி பஞ்சாயத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : K. Chettipatti ,Thirumayam ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...