×

கறம்பக்குடி பகுதியில் மின்சாரம், நிவாரணப்பொருட்கள் கேட்டு 3 இடங்களில் மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கறம்பக்குடி ,டிச. 25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று காலை மழையூர் மின் வாரியத்திற்கு உட்பட்ட வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் மின் இணைப்பை வழங்குவதற்கு தாமதப்படுத்தும் மழையூர் மின் வாரியத்தை கண்டித்தும் உடனடியாக ஆழ்குழாய் கிணறு பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரியும் 4 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் துவார் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த மழையூர் காவல் துறை எஸ்ஐ தண்டாயுதபாணி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர் மழையூர் அருகே உள்ள தீத்தானிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் தெரு பொது மக்கள் அனைவருக்கும் நிவாரணம் , நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீத்தானிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கறம்பக்குடி மழையூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபல்லவராயன்பத்தை ஊராட்சியில் குளப்பன்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் குளப்பன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் அனைவருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் கறம்பக்குடி தாலுகா மழையூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கறம்பக்குடி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் பொது மக்களிடம் கிடைக்க பெறாதவர்கள் அனைவரும் மனுக்களை கொடுங்கள் என்றும் ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

Tags : area ,Karampukkudi ,road traffic accidents ,places ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி