×

கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர்,டிச.25: பழைய திண்டுக்கல் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில்  பழைய திண்டுக்கல் சாலை உள்ளது. லைட்ஹவுஸ் பகுதியில் இருந்து ஜவகர் பஜார்  செல்லும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. ஏராளமான வணிக  நிறுவனங்களும் உள்ளன. வணிக நிறுவனத்திற்கு வருபவர்கள் கார்களையும்,  இருசக்கர வாகனங்களையும் சாலையோரம் நிwறுத்தி வைக்கின்றனர். சாலையில்  பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல  முடியாமல் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும் மூன்று சிறிய தெருக்கள் உள்ளன.  இதன்வழியாக இரு சக்கர வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மேலும் சுந்தரவிலாஸ் சந்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருசக்கர  வாகனங்கள் செல்லும் வகையில் தெருவிரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  

நெரிசல் ஏற்படும் சமயங்களில் இந்த தெருவில் இருசக்கர வாகனங்களை திருப்பிவிட  நகராட்சி காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை கோரிக்கை  வைத்தும் நிறை வேறவில்லை. இந்த சந்தை பயன்படுத்தாமல் போனால் மீண்டும்  ஆக்கிரமிப்புக்கு உள்ளாக நேரிடும் என இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : halt ,Old Dindigul Road ,Karur ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை