×

மதுக்கடைகளை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

புதுச்சேரி, டிச. 25: புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே சாராயக்கடை, கள்ளுக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மதுபான கடையும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்வி நிலையம், கோயில், குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் சாராயம், கள்ளு, மதுபான கடைகள் இயங்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து முதல்வர், சபாநாயகர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனுவும் அளித்தனர். ஆனால் மதுக்கடைகள் அகற்றப்படவில்லை. இதனை கண்டித்தும், மதுக்கடைகளை அகற்றிடக் கோரியும் சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த மதுபானம் மற்றும் சாராயக்கடை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, முற்றுகையிட கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகிலிருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.மதுக்கடை அருகே லாஸ்பேட்டை போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால், பேரிகார்டுகளை தாண்டி செல்ல முயன்றதால் போலீசார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஏஐயுடியுசி செயலாளர் முத்து, தலைவர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : removal ,bartender ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...