×

பாமக நிறுவனர் ராமதாசுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்

வானூர், டிச. 25:   வானூர் தாலுகா தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தங்கிதான் ராமதாஸ் அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் கிளியனூரை சேர்ந்த விசி கட்சியை சேர்ந்த ஒரு இளைஞர் பாமக நிறுவனர் ராமதாசையும், தோட்டத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பியுள்ளார்.
இது பாமகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு வாட்ஸ்அப் மூலம் பேசி பதிவிட்ட கிளியனூரை சேர்ந்த காந்த் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக ஒன்றிய செயலாளர்
சுதாகர் கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags : founder ,Watts ,Ramakrishna ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா