×

மானூர் அருகே வாலிபரை வெட்டிய தொழிலாளி கைது

மானூர், டிச. 25:   மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (38)  அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் (37) இருவரும் அழகியபாண்டியபுரத்திலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து உள்ளனர். இதில் சண்முகவேலின் மனைவி கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதனிடையே  உறவினர் துக்க வீட்டுக்கு சண்முகவேல் போகவில்லை. இந்நிலையில் சண்முகவேல் தனது மனைவியை வாழ அழைக்குமாறு அங்கு சென்ற போது மனைவி அவருடன் வரமறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாராயணனை சண்முகவேல் அரிவாளால் வெட்டினார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மானூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சண்முகவேலை கைது செய்தார்.

Tags : Manoor ,
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்