×

திருக்குறள் எக்ஸ்பிரஸ் டிச.30ல் தாமதமாக ஓடும்

நாகர்கோவில், டிச. 25:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: சென்னை கோட்டத்தில் தண்டையார்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தடத்தில் வரும் 30ம் தேதி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ரயில் எண்: 12642 ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் 29ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்படுவது 30ம் தேதி கூடூர்- சென்னை இடையே 2 மணி நேரம் நிறுத்தி விடப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 2 மணி வரை முன்பதிவு:தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில், ‘கிறிஸ்துமஸ்  பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் கணினி முன்பதிவு  மையங்கள் இன்று (25ம் தேதி) இயங்குவது போன்று காலை 8  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thirukkural Express ,
× RELATED பிப்.26 முதல் 28 வரை ரயில்வே கால அட்டவணை...