×

நாமக்கல், நல்லிபாளையம் ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல், டிச.21:  நாமக்கல் ரேஷன் கடைகளில், கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.நாமக்கல், நல்லிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியாமரியம் நேற்று ஆய்வு செய்தார்.பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பு நிலவரங்களை சரிபார்த்தார். அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார். கடைக்கு வரும் பொதுமக்களிடம், கலெக்டர் குறைகளை கேட்டறிந்து, பொருட்கள் தரமாக உள்ளதா எனவும் விசாரித்தார். அதேபோல் 20 கிலோ இலவச அரிசி மாதம் தோறும் கிடைக்கிறதா என பெண்களிடம் கலெக்டர் கேட்டார். இதற்கு பெண்கள், 18 கிலோ அரிசியாகவும், 2 கிலோ கோதுமையாகவும் தரப்படுவதாக கூறினர். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகார் வராமல் பணியாற்ற வேண்டும் என ஊழியர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத்பேகம் உடனிருந்தார்.     

Tags : Collector ,inspection ,Namakkal ,ration shop ,Nallipalayam ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி