ஊத்தங்கரையில் பரபரப்புதெருநாய்கள் கடித்து 20 சண்டைக்கோழி பலிநஷ்டஈடு கேட்டு விவசாயி தர்ணா

ஊத்தங்கரை, டிச.21: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்(35). விவசாயியான இவர், காமராஜர் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சண்டைக்கோழிகளை வளர்த்து வருகிறார்.       இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, ஆனந்தன் சென்று பார்த்துள்ளார். அப்போது, தெருநாய்கள் சண்டைக்கோழிகளை வேட்டையாடி கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே, சுதாரித்துக்கொண்டு நாய்களை விரட்டியடித்தார். தெருநாய்கள் கடித்து குதறியதில், 20 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டு கண்ணீர் வடித்தார். இதையடுத்து, இறந்த கோழிகளை எடுத்துக்கொண்டு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த ஆனந்தன், அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஊத்தங்கரை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களை பிடித்து செல்லுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 20 சண்டைக்கோழிகளை நாய்கள் கடித்து குதறி சாகடித்துள்ளதால், ₹20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். ஊத்தங்கரை பகுதியில் தற்போது தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை அருகே கொட்டுகாரன்பட்டி பகுதியில் தெருநாய் கடித்து 10 பேர் காயமடைந்த நிலையில், தற்போது 20 சண்டைக்கோழிகள் பலியாகி உள்ளதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி