×

தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல தலைவர் பேச்சு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி விஏஓக்கள் உண்ணாவிரதம்

திருச்சி, டிச. 21: திருச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் மத்திய பஸ்நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்றார். பொருளாளர் நடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் அழகிரிசாமி போராட்ட விளக்க உரையாற்றினார்.மாநில பொது செயலாளர் மதிவாணன், முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணிவண்ணன், அரங்க.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமாக உயர்த்த வேண்டும், பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் விஏஓக்களுக்கு பணிவரன்முறை மற்றும் தகுதி காண் பருவம் ஆகியவற்றிற்கான ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல் கோரிய அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மாறுதல் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை உண்ணாவிரதத்தை மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முக வடிவு முடித்து வைத்தார். யமுனை துறைவன், தாமோதரன் அலங்காரம்ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாவை நோன்பின் 5ம் நாளான நேற்று பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் யமுனைதுறைவன், தாமோதரன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Tags : Speech VOs ,National Green Tribunal South Chairman ,Old Pension Scheme ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தி 15ம்...