×

கறம்பக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கறம்பக்குடி, டிச.21: கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(65). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் கறம்பக்குடியில் குடும்பத்துட குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கஜா புயலில் வீடு சேதமடைந்ததால் கஸ்தூரி மகன்கள் வீட்டில் மாறி மாறி தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் மருதன்கோன்விடு–்தியில் உள்ள புயலால் சேதமடைந்த தனது வீட்டை சீரமைப்பதற்காக நேற்று காலை வீட்டிற்கு கஸ்தூரி சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த  கஸ்தூரி தனது 2 மகன்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மகன்கள் இருவரும் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் செயின் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கஸ்தூரி கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையை பூட்டிய விவகாரம்: 4 பேர் கைது: கறம்பக்குடியில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு பூட்டு போட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  கறம்பக்குடி அருகே மஞ்சுக்காடு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பால் பவுடரை சாப்பிட்டு அக்கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டது. இதில் 9 மாத குழந்தை உட்பட 7 பேர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சையின்போது டாக்டர் வராத காரணத்தினாலும், முறையாக சிகிச்சை அளிக்காததாலும் மஞ்சுக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு மருத்துவமனைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தலைமை மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் மருத்துவரை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுக்காடு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(27), பால்சாமி(29), வெங்கடேஷ்(21), கார்த்திக்ராஜா(18) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : house ,Karambukudi ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!