×

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

நாகை,டிச.21:நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவையொட்டி அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரிவிழா வரும் 6.2.2019 முதல் 19.2.2019 வரை  நடைபெறுகிறது. இதையடுத்து  நாகை கலெக்டர் அலுவலகத்தில் விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவிற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் திரளான யாத்ரீகள் வருகை தருவார்கள்.  

இந்த புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா நடைபெறும் போது  மாவட்ட நிர்வாகதின் சார்பாக நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம், குடிநீர் வடிகால் வாரியம்,  உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ளும். அது போன்று இந்த ஆண்டு பிற வருடங்களை காட்டிலும் விழா சிறப்பாக நடைபெறும் வகையில் நடத்த ஆய்வு கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டது.  நாகூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் தர்காவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சந்தன கூடு சுற்றும் வீதிகளில் உள்ள ஆக்கிரமைப்புகள் அகற்றிடவும், பொது சுகாதார துறையின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம் அமைத்திடவும், தர்கா அலுவலத்தில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டு கண்காண்ணிப்பு மையம் அமைக்கவும், யாத்திரிகர்கள் புனித நீராடும் தர்கா குளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. எஸ்பி விஜயகுமார்,  நாகூர் தர்கா தற்காலிக நிர்வாகி அலாவுதீன்,  நாகை சார் கலெக்டர் கமல்கிஷோர்,முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Dharga Kanduri ,Nagara ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...