×

சூரங்குடியில் டெங்கு காய்ச்சல்சிறப்பு முகாம்

குளத்தூர், டிச.21:  இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டல குழாய் பாதை திட்டத்தின் சார்பில் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் பத்து கிராமங்களில் நடைபெறுகிறது. முதற் கட்டமாக விளாத்திகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட சூரங்குடியில் உள்ள தனிஸ்லாஸ் ஆரம்ப பள்ளி வளாகத்தில் நடந்தது.

மதர் சமூக சேவை நிறுவன வளர்ச்சி அதிகாரி நூர்முகம்மது வரவேற்றார். இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி, தொண்டு நிறுவன ஆலோசகர் தர், சூரங்குடி முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆரம்பப்பள்ளி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மயில் முகாமைத் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். பன்றி, டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள், அதற்கான மருந்துகள் உட்கொள்ளும் முறை, இருக்கும் இடங்களை வைத்திருக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் உத்திராடசெல்வி, ஆசிரியர்கள் ஆரோக்கியமேரி, கோமதி, விஜயதமயந்தி, மாரியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Dengue fever camp ,
× RELATED மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி