×

பட்டா உட்பிரிவில் விஏஒ தலையீட எதிர்ப்பு நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும்?

மதுரை, டிச. 21: நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நீர் பங்கீட்டு பாசனத்தில் விவசாயிகளை பங்கேற்க செய்யும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் பாசனம் மற்றும் நீர் பங்கீட்டு சட்டம் கடந்த 2001ல் அமலானது. இதன்படி, விவசாயிகளை கொண்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. நீரினை பகிர்வது, கால்வாய்களை பாதுகாப்பது, உடைப்பை சரி ெசய்தல், விவசாயம் சார்ந்த திட்டங்களை தீட்டுவது, நீர் திறப்பு உள்ளிட்டவை ெதாடர்பான பணிகளில் இச்சங்கத்தினர் ஈடுபடுவர். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் விவசாயம் மற்றும் நீர் பங்கீடு சம்பந்தமான பணிகள் பாதித்துள்ளன.

குடிமராமத்து பணிகளில் இந்த சங்கத்தினரின் பங்கு மிகப்பெரியது. ஆனால், தமிழகம் முழுவதும் பல கோடி செலவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் இச்சங்கத்தினரின் பங்கு இல்லாமல் போனது. எனவே, நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சங்கத்திற்காக தேர்தல் எப்போது நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மற்றும் முடிவுகள் எப்போது வெளியிடப்படும். இதற்கான அட்டவணை மற்றும் வாக்காளர் விபரங்களை வெளியிடுதல் உள்ளிட்டவை குறித்து தலைமை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜன.23க்கு தள்ளி வைத்தனர்.

Tags : VAO ,Pattaya ,
× RELATED காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்...