×

திருத்தணியில் திருப்படி திருவிழா ஆலோசனை கூட்டம் : கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

திருத்தணி, டிச. 21: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற இருக்கும் திருப்படி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளின் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கென  மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மலைக்கோயிலில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் சிவாஜி வரவேற்றார். தக்கார் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில் ‘மின்வாரியம், போக்குவரத்து, நகராட்சி, சுகாதாரம், காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அப்ேபாது, மலைக்கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,MLA ,Collector ,
× RELATED டெல்லி சென்றுள்ள முதலமைச்சர்...